

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் 100 பந்துகளைக் கடந்து விளையாடியுள்ளார்.
இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்களை விட அதிகமான பந்துகளை குல்தீப் யாதவ் விளையாடுவது பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 489 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 194/9 ரன்கள் எடுத்துள்ளது.
சுழல் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 134 பந்துகள் விளையாடி 19 ரன்கள் எடுத்தார்.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 97 பந்துகள் விளையாடியதே இரண்டாவது அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.