தென்னாப்பிரிக்கா 508 ரன்கள் முன்னிலை! தோல்வியின் விளிம்பில் இந்தியா?

குவாஹாட்டி டெஸ்ட்டின் நான்காம் நாள் உணவு இடைவேளை ஸ்கோர்...
தென்னாப்பிரிக்கா 508 ரன்கள் முன்னிலை
தென்னாப்பிரிக்கா 508 ரன்கள் முன்னிலைPTI
Published on
Updated on
1 min read

குவாஹாட்டி டெஸ்ட்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையில், இரண்டாவது இன்னிங்ஸில் 220 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்துள்ளது.

மேலும், 508 ரன்கள் முன்னிலை பெற்று தென்னாப்பிரிக்கா அணி வலுவான நிலையில் உள்ளது. தோல்வியின் விளிம்பில் உள்ள இந்திய அணி, போராடி டிரா செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் 489 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி பேட்டர்கள் சொதப்பியதால், 201 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தது.

ஃபாலோ -ஆன் வாய்ப்பு இருந்தும் தென்னாப்பிரிக்க அணி மீண்டும் பேட்டிங் விளையாடத் தொடங்கியது. நான்காவது நாளான இன்று மதிய உணவு இடைவேளையில் 220 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது தென்னாப்பிரிக்கா.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தொடர்ந்து வருகின்றது. தற்போது 508 ரன்கள் முன்னிலை உள்ளது. தென்னாப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 62 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் விளையாடி வருகிறார். இந்தியாவின் ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நாளை ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா நிர்ணயிக்கும் இலக்கை இந்திய வீரர்கள் விரட்டி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

விக்கெட்டுகளை இழக்காமல் இந்திய வீரர்கள் களத்தில் தாக்குப்பிடித்தால் டிரா செய்வதற்கான வாய்ப்புள்ளது.

Summary

South Africa lead by 508 runs! India on the verge of defeat?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com