இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வி..! சோகத்தில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய தோல்வி குறித்து...
India's captain Rishab Pant, right, Mohammed Siraj, centre, and Jasprit Bumrah on the fourth day of the second cricket test match between India and South Africa in Guwahati,
சோகத்தில் இந்திய வீரர்கள். படம்: ஏபி
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

இரண்டாவது முறையாக சொந்த மண்ணில் தொடரை முற்றிலுமாக இழந்த நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய தோல்விகள் (ரன்கள் அடிப்படையில்)

  1. 408 ரன்கள் - தெ.ஆ. எதிராக (குவாஹாட்டி, 2025)

  2. 342 ரன்கள் - ஆஸி.க்கு எதிராக (நாக்பூர், 2004)

  3. 341 ரன்கள் - பாகிஸ்தானுக்கு எதிராக (கராச்சி, 2006)

  4. 337 ரன்கள் - ஆஸி.க்கு எதிராக (மெல்போர்ன், 2007)

  5. 333 ரன்கள் - ஆஸி.க்கு எதிராக, (புணே, 2017)

  6. 329 ரன்கள் - தெ.ஆ. எதிராக (கொல்கத்தா, 1996)

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்றது.

குவாஹாட்டியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியுற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. 489/10 ரன்கள் எடுக்க, இந்தியா 201/10 என்கள் மட்டுமே எடுத்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் தெ.ஆ. 260/5 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, இந்தியா 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆட்ட நாயகனாக மார்கோ யான்செனும் தொடர் நாயகனாக சிமோன் ஹார்மரும் தேர்வானார்கள்.

Summary

The Indian cricket team has suffered its biggest defeat in its Test cricket history.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com