

தென்னாப்பிரிக்க அணியுடனான வரலாற்றுத் தோல்விக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் திமிராகப் பேசியுள்ளார்.
என்னை நீக்குவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம். ஆனால் என்னுடைய வெற்றியை நினைத்துப் பாருங்கள் எனப் பேசியது சர்ச்சையாகி வருகிறது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
ஏற்கெனவே, நியூசிலாந்து உடன் இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என தோற்றது.
என் சாதனைகளையும் கவனியுங்கள்
இந்தத் தோல்வி குறித்து கம்பீர் பேசியதாவது:
என்னுடைய எதிர்காலத்தை பிசிசிஐ முடிவு செய்யலாம். ஆனால், இங்கிலாந்திலும் சாம்பியன்ஸ்டிராபியிலும் வெல்ல காரணமாக இருந்ததும் இதே ஆள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குற்றம் சுமத்துதல் எல்லோர் மீதும் இருக்கிறது. அது என்னில் இருந்து தொடங்கட்டும்.
தனிமனிதரை குறைகூறமாட்டேன்...
நாங்கள் இன்னமும் கவனமாக விளையாடியிருக்க வேண்டும். 95/1 லிருந்து 122/7 என்பதை ஏற்கமுடியவில்லை. இதற்காக ஒரு வீரரையோ அல்லது ஒரு ஷாட்டையோ குறைகூற முடியாது.
அனைவரின் மீதும் தவறிருக்கிறது. நான் தனிமனிதரை குறைகூறமாட்டேன்.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அதீத திறமைசாலிகள் தேவையில்லை; குறைவான திறமைகளுடன் வலுவான மனநிலைக் கொண்டவர்களே போதுமானது.
அவர்களே நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டர்களை உருவாக்குவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.