25 ஆண்டுகளுக்குப் பிறகு... தெ.ஆ. வரலாற்று வெற்றி..! இந்தியா ஒயிட்வாஷ்!
இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
தெ.ஆ. அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவை 2-0 என ஒயிட்வாஷ் செய்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்றது.
குவாஹாட்டியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியுற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. 489/10 ரன்கள் எடுக்க, இந்தியா 201/10 என்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸில் தெ.ஆ. 260/5 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, இந்தியா 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தெ.ஆ. அணி தொடரை வென்றுள்ளது. கடைசியாக கடந்த 2000-இல் ஹான்ஸி குரொன்யே தலைமையிலான அணி வென்றிருந்தது.
தற்போது, டெம்பா பவுமா தலைமையில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
The South African team has recorded a historic victory on Indian soil.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

