

இரண்டாவது ஆஷஸ் போட்டிக்கான 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியிலும் பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் ஆஷஸ் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஆஸி. அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது.
முதல் டெஸ்ட்டினை இரண்டே நாளில் முடித்து அபார வெற்றி பெற்றது ஆஸி.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட்டுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாற்றமும் இல்லாத அதே 14 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாக்கெட், கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.
இரண்டாவது ஆஷஸ் போட்டி வரும் டிச.4ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் மோசமாக தோற்றதால், இங்கிலாந்து அணியில் எதாவது மாற்றம் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.