மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா பேட்டிங்: பிளேயிங் லெவனில் ருதுராஜ்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி குறித்து...

News image
தெ.ஆ. கேப்டன் மார்கரம், இந்திய கேப்டன் கே.எல்.ராகுல். - படம்: ஏபி
Updated On :30 நவம்பர் 2025, 8:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

எம்.எஸ்.தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க ரோஹித் - கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒருநாள் அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய அணி 9 ஓவர் முடிவில் 72/1 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மாவின் கேட்ச் 1 ரன்னில் தவறவிடப்பட்டதும் தற்போது அதிரடியாக விளையாடி வருகிறார்.

இந்திய அணியினர் பிளேயிங் லெவன்

ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

தென்னாப்பிரிக்க அணி பிளேயிங் லெவன்

ரியான் ரிக்கல்டன், குயின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டெவால்ட் ப்ரீவிஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், பிரேனெலன் சுப்ரயன், நந்த்ரே பர்கர், ஒட்னீல் பார்ட்மேன்.

summary

The Indian team is batting in the first ODI against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.