
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் முகமது சிராஜ், மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
டாஸ் வென்ற 15 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு டெஸ்ட்டில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட்டினை அகமதாபாதில் விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 4-ஆவது ஓவரில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது.
அடுத்து, தொடர்ச்சியாக 7,10,12-ஆவது ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்தியாவின் சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் பும்ரா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.
மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் தற்போது ரோஷ்டன் சேஸ் 5 ரன்கள், ஷாய் ஹோப் 4 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.