
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புதன்கிழமை இந்தூரில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 49.3 ஓவரில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிரடியாக விளையாடி கார்ட்னர் 83 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர், லியா தகுகு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
ஆனால் நியூசிலாந்து வீரர்களால் ஆஸ்திரலிய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. கேப்டன் சோபி டிவைன் மட்டும் சிறப்பாக விளையாடி தன் பங்கிற்கு 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 43.2 ஓவரில் 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.