
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிவேக சதம் விளாசி இந்திய இளம்வீரர் சூரியவன்ஷி புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் ஹேலீ ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அதிகபட்சமாக ஸ்டீவ் ஹோகன் 92 ரன்கள் விளாசினார். இந்திய அணித் தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர், முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 81.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 428 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 140 ரன்களும், ருத்ரதாண்டவம் ஆடிய 14 வயது சிறுவனான சூரியவன்ஷி 86 பந்துகளில் 113 ரன்களும் குவித்தனர். இதில் சூரியவன்ஷி 9 பவுண்டரிகளையும் 8 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.
வெறும் 78 பந்துகளில் சதம் அடித்த சூரியவன்ஷி, இளம்வயதில் யு-19 டெஸ்ட்டில் 100 பந்துகளுக்குள்ளாகவே இரண்டு சதங்கள் விளாசியவர் என்ற நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லத்தின் சாதனையையும் முறியடித்தார்.
தொடர்ந்து சாதனைக்கு சாதனை புரிந்துவரும் சூரியவன்ஷி, பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளார். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 56 பந்துகளில் சதம் விளாசியிருந்த அவர், ஐபிஎல்லில் 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது.
இளம் வயதில் (19 வயதுக்குள்) அதிவேக சதமடித்தவர்கள்
மொயீன் அலி - 56 பந்துகள்
வைபவ் சூர்யவன்ஷி- 58 பந்துகள்
ஆயுஷ் மத்ரே - 64 பந்துகள்
வைபவ் சூர்யவன்ஷி - 78 பந்துகள்
ஜோனாதன் வண்டியர் - 87 பந்துகள்
ஜார்ஜ் பெல் - 88 பந்துகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.