
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் சினாலோ ஜாஃப்டா அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இங்கிலாந்து தரப்பில் லின்ஸி ஸ்மித் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட், சோஃபி எக்கல்ஸ்டோன் மற்றும் சார்லி டீன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், லாரன் பெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அபார வெற்றி
70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 14.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளான டம்மி பீமௌண்ட் 35 பந்துகளில் 21 ரன்களும், எமி ஜோன்ஸ் 50 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லின்ஸி ஸ்மித்துக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.