
ஆஸி. மகளிரணியின் அபாரமான வெற்றிக்கு வித்திட்ட பெத் மூனியின் இன்னிங்ஸ்தான் தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ் என ஆஸி. கேப்டன் அலீஸா ஹீலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மகளிரணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸி. அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அங்கிருந்து 221 ரன்களாக மாற பெத் மூனி (109) மற்றும் அலானா கிங் (51*) உதவினார்கள்.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகியாக பெத் மூனி தேர்வானார். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் ஆஸி. அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்கள்.
இந்தப் போட்டி குறித்து ஆஸி. கேப்டன் அலீஸா ஹீலி கூறியதாவது:
இரண்டு புள்ளிகள் கிடைத்தன. நாங்கள் அடுத்த போட்டிக்குச் சென்றுவிடுவோம். பெத் மூனி விளையாடி, நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்பேன்.
நான் என் கிரிக்கெட் வாழ்நாளில் பெத் மூனியின் பேட்டிங்கை கவனித்து வருகிறேன். இதுவரை நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸை அவர் விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
ஒரு கட்டத்தில் 150-160 ரன்கள் மட்டுமே எடுப்போம் என்றிருந்தது. அதைக் கட்டுப்படுத்துவது கடினம். 200 ரன்களைக் கடக்க மூனியும் அலானாவும் உதவினார்கள்.
சில நேரங்களில் பிட்ச் திடீரென மாறுகிறது. இனிமேல் பிட்ச்களுக்கு ஏற்ப விரைவாகவே நாங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அடுத்த போட்டியில் ஆஸி. அணி இந்தியாவை அக்.12ஆம் தேதி எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.