
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
முதல் செஷனில் மதிய உணவு இடைவேளை வரைக்கும் 28 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டிலும் வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
கே.எல்.ராகுல் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 40 ரன்கள், சாய் சுதர்சன் 16 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.
ஜோமல் வாரிக்கன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முனைப்பில் மே.இ.தீ. அணி இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.