
டெஸ்ட் கிரிக்கெட் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் இந்திய முன்னாள் கேப்டன்கள் கங்குலி, தோனி, விராட் கோலி ஆகியோரின் சாதனையை தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி தில்லியின் அருண் ஜேட்லி திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 134.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 175 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 129 ரன்களும் குவித்தனர்.
இங்கிலாந்து தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஷுப்மன் கில்லுக்கு இது 5-வது சதமாகும். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன்கள் பட்டோடி, கங்குலி, தோனி ஆகியோரின் சாதனைகளை சமன்செய்துள்ளார்.
இந்தப் பட்டியலில் 20 சதங்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இதுமட்டுமின்றி, ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் கில் சமன் செய்துள்ளார். 2017 - 2018 ஆம் ஆண்டில் விராட் கோலி 5 சதங்கள் விளாசியிருந்தார்.
அதிக சதங்கள் விளாசிய இந்திய கேப்டன்கள்
விராட் கோலி - 20 சதங்கள்
சுனில் கவாஸ்கர் - 11 சதங்கள்
முகமது அசாருதீன் - 9 சதங்கள்
சச்சின் டெண்டுல்கர் - 7 சதங்கள்
சௌரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி, பட்டோடி, ஷுப்மன் கில்* - 5 சதங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.