
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 13) அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ளனர். பென் சியர்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் டி20 தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கோப் டஃபி, ஸாக் ஃபோல்க்ஸ், மாட் ஹென்றி, பெவான் ஜேக்கோப்ஸ், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், டிம் செய்ஃபர்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.