
இந்திய மகளிரணி ஆஸி. மகளிடம் தோல்வியுற்றது குறித்து முன்னாள் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
இந்த்த் தோல்வியிலிருந்து வெளிவந்து அடுத்த கட்ட போட்டிக்கு என்ன செய்ய வேண்டும் எனப் பேசியுள்ளார்.
கடைசியாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 330 ரன்களை சேஸ் செய்தது ஆஸ்திரேலியா. இதுவரை யாருமே மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸ் செய்யாத சாதனையை முடித்து வரலாறு படைத்தது.
இந்தப் போட்டியில் அலீஸா ஹீலி 140 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகி விருது வென்றார்.
அடுத்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துடன் அக்.19ஆம் தேதி மோதுகிறது.
இது குறித்து ரெக்சோனா கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் ஜியோஸ்டாரில் மிதாலி ராஜ் பேசியதாவது:
ஆஸ்திரேலியாவுடனான தோல்வியில் இருந்து வெளியேற இந்தியா வழிகளைக் கண்டறிய வேண்டும்.
புதிய போட்டியாளர் இங்கிலாந்துடன் விளையாடு உள்ள நிலையில் இந்திய அணி தங்களது திட்டங்களை புதுப்பிக்க வேண்டும்.
அந்தப் போட்டியும் வேறு இடத்தில் நடைபெற இருப்பதால், அதற்கு இந்திய அணி எப்படி தன்னை தகவமைத்துக் கொள்கிறதென்பது மிகவும் முக்கியம்.
அரையிறுத்திக்குச் செல்ல வேண்டுமானால், அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வென்றாகவேண்டும்.
ஆஸி.க்கு எதிராக 300-க்கும் அதிகமான ரன்களை எடுத்தாலும் ஒரு வார காலம் இடைவெளி அணியின் ஒழுங்கமைப் பாதிக்கலாம்.
பேட்டர்கள் நன்றாக விளையாடினாலும் 6,7 நாள் ஓய்வு நல்லதல்ல. இதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதும் முக்கியம் என்றார்.
புள்ளிப் பட்டியலில் ஆஸி. முதலிடத்திலும் இங்கிலாந்து, இந்தியா முறையே 2, 4ஆவது இடங்களில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.