
ஜியோஸ்டாருடன் சிறப்பு உரையாடலில், லிவர்பூல் ரசிகரும் இந்திய கிரிக்கெட் வீரருமான சஞ்சு சாம்சன், இந்தியாவில் நிலவும் தீவிரமான கால்பந்து கலாச்சாரத்தைப் பற்றி பேசினார்.
இவருடன் லிவர்பூல், மான்செஸ்டர் யுனைட்டெட் அணிகளுக்காக விளையாடிய பிரிமியர் லீக் நாயகன் மைக்கேல் ஓவனுடன் இணைந்து பணிபுரிவதில் ஏற்பட்ட தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் சஞ்சு சாம்சனை இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.
இவருடன் முன்னாள் லிவர்பூல் கால்பந்து வீரர் மைக்கேல் ஓவன் சந்தித்துப் பேசினார். இருவரும் சூப்பர் ஓவர் கிரிக்கெட் விளையாடினார்கள்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு சஞ்சு சாம்சன் பேசியதாவது:
மைக்கேல் ஓவனிடம் நானும் எனது அப்பாவும் எவ்வளவு அவரது ஆட்டத்தை எவ்வளவு ஆர்வத்துடன் அவர் விளையாடுவதைக் கண்டோம் என்று கூறினேன்.
என் அப்பாவே அவரின் பெரிய ரசிகர். அவருடன் இணைவது ஒரு சிறந்த கூட்டணி. இதைத் தொடங்குவதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
கால்பந்துக்கான ஆர்வம் குறைவாக மதிப்பிடப்படுகிறது...
மும்பை கால்பந்து திடலில் மைக்கேல் ஓவன் விளையாடும் போட்டிக்காக அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
‘இந்தியாவில் கால்பந்துக்கான ஆர்வம் அடிக்கடி குறைவாக மதிப்பிடப்படுகிறது, என எனது சகோதரன் கூறுவார். உண்மையில் சிலர் அதற்காக பித்துப்பிடித்தவர்களாக உள்ளனர். இன்னும் பல திறமைகள் மற்றும் ரசிகர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளனர்.
நான் கேரளாவில் ஒரு ஆட்டத்தை பார்த்தேன். மலப்புரம் எப்ஃசி அணியில் நான் பங்குதாரராக உள்ளேன். அந்தத் திடல் 30,000 பேரால் நிரம்பியிருந்தது. ரசிகர்களின் உற்சாகத்தை அங்கே காணலாம்.
சாதமும் மீன் குழம்பும்...
இந்தியாவில் கால்பந்துக்கான பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. மைக்கேல் ஓவனை கொச்சிக்கு அழைத்திருக்கிறேன். அவர் அங்கு வந்து கால்பந்தை மேலும் அனுபவிக்கட்டும். மேலும், நாங்கள் அவரை சாதமும் மீன் குழம்பும் வைத்து வரவேற்போம்.
மைக்கேல் ஓவனைப் பற்றிய அவரது சிறுவயது நினைவுகள்
நாங்கள் தில்லியில் காவல் தலைமையகத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் உட்கார்ந்திருப்போம். அப்பா வந்து ‘இன்று இரவு 9 மணிக்கு மைக்கேல் ஓவன் விளையாடப் போகிறார், பார்ப்போமா?’ என்று கேட்பார். வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமான வழிகளில் மனிதர்களை இணைக்கிறது என்பதே ஆச்சரியம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.