
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தெ.ஆ. அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தெ.ஆ. அணி 2டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதன்படி லாகூரில் முதல் டெஸ்ட் அக்.12ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ரன்கள் குவிக்க, தெ.ஆ. 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 269க்கு ஆட்டமிழக்க, தெ.ஆ. 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தெ.ஆ. அணியின் தொடர்ச்சியான 10 டெஸ்ட் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்த நோமன் அலி ஆட்ட நாயகனாக தேர்வானார்.
சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகளில் நோமன் அலி 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சஜித் கானும் சிறப்பாக வீசினார். தோல்வியில் முடிந்தாலும் தெ.ஆ. வீரர் செனுரன் முத்துச்சாமி 11 விக்கெட்டுகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.