
விராட் கோலியின் சமீபத்திய பதிவு விளம்பரத்திற்கானதென தெரிய வந்ததும் அவரது ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.
ஓய்வு பெறுவது போல சர்ச்சைகள் உள்ள சூழ்நிலையில் இப்படியான பதிவுகள் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான விராட் கோலி டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தகவல்கள் தெரியவந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று காலை ஒரு பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நீ உன்னையே கைவிடும்போதுதான், உண்மையாகவே தோற்றுவிடுகிறாய்” என்ற பழமொழியை பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு 2027 உலகக் கோப்பை கனவு, அவரது ஓய்வு என பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.
இந்நிலையில், விராட் கோலி அந்தப் பதிவு விளம்பத்திற்கான வாசகம் எனக் குறிப்பிட்டு விடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்தச் செயலுக்கு கோலி மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதேபோல, டி20 உலகக் கோப்பையின்போது எம்.எஸ்.தோனி பதிவிட்டதும் சர்ச்சையானது.
ரசிகர்களின் உணர்ச்சிகளை வியாபாரம் ஆக்குவதா? என விராட் கோலியின் பதிவுகளில் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.