
தமிழக வீரர் ஆர். அஸ்வின் மிகச்சிறந்த புத்திசாலி என முன்னாள் ஆஸி. விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார்.
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் ஆர். அஸ்வின் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் (39 வயது) இந்தியாவுக்காக டெஸ்டில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்தாண்டு ஓய்வை அறிவித்தார்.
இந்த சீசனில் சுமாராக விளையாடியதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாகக் கூறினார்.
தற்போது, வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடுவதில் அஸ்வின் முனைப்பு காட்டி வருகிறார்.
துபை டி20யில் அவர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. மாறாக, ஆஸ்திரேலியாவின் பிபிஎல் தொடரில் தேர்வாகியுள்ளார்.
இது குறித்து முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பேசியதாவது:
பிபிஎல் தொடரில் அஸ்வின் ஆர்வமாக பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பது?
கிரிக்கெட்டைப் பொருத்தவரை அவர் மிகச்சிறந்த சிந்தனையாளர். அவர் புதுமையானவர். அவரது எல்லையை விரிவுப்படுத்த நினைப்பவர். அதுவும் கிரிக்கெட் விதிகளுக்கு உள்பட்டே.
தேவைப்பட்டால் அவர் தனது பேட்டிங்கில் இருந்துகூட வெளியேறி மற்றவர்களை ஆட வைப்பார். எவையெல்லாம் விதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அவையெல்லாம் செய்வார்.
ஆழமாக சிந்திக்கக்கூடியவர், புதுமையானவர். பல இந்தியர்கள் வருவதற்கான முதல்படியாக அஸ்வின் வந்திருக்கிறார். இதனால், ஆட்டம் மேம்படும். சிட்னி தண்டருக்கு வாழ்த்துகள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.