
டி20 உலகக் கோப்பைக்கு கடைசி அணியாக ஐக்கிய அரபு அமீரகம் அணி தகுதிபெற்றுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 6 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை இந்தியா, பாகிஸ்தான் உள்பட 19 அணிகள் தகுதிபெற்றிருந்தன.
இந்தச் சுற்றில் ஏற்கனவே நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் தகுதி பெற்ற நிலையில், மீதமுள்ள கடைசி இடத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அணி - ஜப்பானுடன் மோதியது.
கிழக்கு ஆசிய பசிபிக் தகுதிச் சுற்று ஓமனின் அல் அமைராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய ஜப்பான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 116 ரன்கள் எடுத்தது. மியாச்சி 45 ரன்கள் எடுத்தார். ஐக்கிய அரபு அமீரகத் தரப்பில் ஹைதர் அலி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர், பேட்டிங் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி, 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அலிஷான் ஷராபு 46 ரன்களும், முஹம்மது வசீம் 42 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரக அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில், குவாலிஃபையர் சுற்றில் ஜப்பானை வீழ்த்தி 20 வது அணியாக ஐக்கிய அரபு அமீரகம் அணி தகுதிபெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணிகள்
இந்தியா
இலங்கை
ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலியா
வங்கதேசம்
இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா
அமெரிக்கா
மேற்கிந்திய தீவுகள்
அயர்லாந்து
நியூசிலாந்து
பாகிஸ்தான்
கனடா
நெதர்லாந்து
இத்தாலி
ஜிம்பாப்வே
நமீபியா
நேபாளம்
ஓமான்
ஐக்கிய அரபு அமீரகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.