
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரில் விராட் கோலி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடவுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இவர்கள் இருவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் விராட் கோலி, புதிய சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஒருநாள் தொடரில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஒரே வடிவிலான போட்டியில் 51 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலியும் இதுவரையில் 51 சதங்கள் அடித்து சச்சினுடன் சமநிலையில் இருக்கிறார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் அவர் மேலும் ஒரு சதம் அடித்தால், சர்வதேச ஒருநாள் தொடரில் அதிக சதம் அடித்த வீரர் சாதனையைப் பெறுவார்.
மேலும், அந்நிய மண்ணில் ஒருநாள் தொடரில் அதிக சதங்களாக சச்சின், 29 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி 27 சதங்கள் அடித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தொடரில் 3 சதங்கள் அடித்தால், 30 சதங்களுடன் சச்சினின் சாதனையை முறியடிப்பார்.
அதுமட்டுமின்றி, சர்வதேச ஒருநாள் தொடரில் இதுவரையில் 1476 பவுண்டரிகளை விராட் கோலி அடித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொடரில் 24 பவுண்டரிகளை அடித்தால், சர்வதேச ஒருநாள் தொடரில் 1500 பவுண்டரிகளை அடித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையையும் அவர் பெறுவார். முதல் 2 இடங்களில் சச்சின் டெண்டுல்கரும், ஜெயசூர்யாவும் உள்ளனர்.
இதையும் படிக்க: அறிமுக போட்டியில் இரட்டைச் சதமடித்த எம்பிஏ மாணவர்..! கோலியுடன் முதல் போட்டிக்கான வாய்ப்பை இழந்தவர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.