
ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
நியூ சௌத் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விக்டோரியா அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவில் முதல்தர உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன.
ஷெஃபீல்டு ஷீல்டு எனப்படும் இந்தத் தொடரில் நியூ சௌத் வேல்ஸ் அணியும் (என்எஸ்டபிள்யூ) விக்டோரியா அணியும் மோதின.
டாஸ் வென்ற என்எஸ்டபிள்யூ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த விக்டோரியா 240 ரன்கள் எடுக்க, நியூ சௌத் வேல்ஸ் 163 ரன்கள் எடுத்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் விக்டோரியா 177 ரன்கள் எடுக்க, என்எஸ்டபிள்யூ 216 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில், ஸ்காட் போலண்ட் (36 வயது) முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்.
ஆஷஸ் தொடரில் பாட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டால் ஸ்காட் போலண்ட்தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெறுமனே 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை எடுத்து ரசிகர்களிடம் தனியான இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவருக்கு ஆஸி. ரசிகர்கள், ”சிலை வைக்க வேண்டும்” என சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கமாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.