
இந்தியாவின் ஆல்-ரவுண்டர் நிதீஷ் குமார் ஒருநாள் உலகக் கோப்பையில் முதல்முறையாக அறிமுகமாகி இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டி களமிறங்கினார்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி (22 வயது) ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி கவனம் பெற்றார்.
பார்டர் கவாஸ்கர் தொடரிலும் டெஸ்ட்டில் அறிமுகமாகி சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.
முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இருந்து இந்திய அணியின் தொப்பியை வாங்கினார்.
இந்தியாவின் சார்பாக 260-ஆவது நபராக நிதீஷ் குமார் ரெட்டி அறிமுகமாகி இருக்கிறார்.
கடைசி ஓவரில் முதல், கடைசி பந்தில் நிதீஷ் சிக்ஸர் அடித்து அசத்தினார். 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 136/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் எடுத்தார்.
ஆஸி. சார்பில் மூவர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.