
ஆஸ்திரேலியாவுடன் நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள அடிலெய்டு திடலில் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி தோல்வியே தழுவியதில்லை.
மூன்று ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 19 ஆம் தேதி பெர்த் திடலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்த நிலையில், அடிலெய்டு திடலில் நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது இந்திய அணி.
கடந்த 17 ஆண்டுகளில் அடிலெய்டு திடலில் விளையாடிய இந்திய அணி, எந்தப் போட்டியிலும் தோல்வி அடைந்ததே கிடையாது.
இந்த சாதனையை இந்திய அணி தக்கவைக்குமா? ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது அடிலெய்டு திடலில் இந்திய அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றுமா? என்பது நாளை தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.