
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு திடலில் நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் களமிறங்கிய கேப்டன் கில் 6 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து வந்த விராட் கோலியும் டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர், ரோஹித் சர்மாவும், ஷ்ரேயாஸ் ஐயரும் நிதானமாக விளையாடி விக்கெட் போகாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ரோஹித் சர்மா 73 ரன்களுக்கு (97 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயரும் 61 ரன்களுக்கு (77 பந்துகள்) ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய அக்ஷர் படேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் வரிசையாக விக்கெட் பறிபோனது. சிறிது நேரம் தாக்குப்பிடித்த அக்ஷர் 44 ரன்களுக்கு அவுட்டானார்.
இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 264 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.