
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அரைசதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா வியாழக்கிழமை புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு திடலில் நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் கில் களமிறங்கினர். கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இருப்பினும் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். ஸ்டார்க் வீசிய 30வது ஓவரில் ஹேசில்வுட்டிடன் கேட்ச் கொடுத்து ரோஹித் அவுட்டானார். 97 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.
புதிய சாதனை
ஆஸ்திரேலியாவில் அந்நாட்டுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 1,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
இதுவரை 21 போட்டிகளில் விளையாடி ரோஹித் சர்மா, இந்த சாதனையைப் படைத்துள்ளார். 76 பவுண்டரிகள், 29 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் இந்திய வீரர் கோலி உள்ளார். இவர் 20 போட்டிகளில் 802 ரன்கள் அடித்துள்ளார். டெண்டுல்கர் 740, தோனி 684 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.