2-வது ஒருநாள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்Photo : X / BCCI
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அடிலெய்டு திடலில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகின்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஷ், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி மாற்றமின்றி களமிறங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியில் மூன்று வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அடிலெய்டு திடலில் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி தோல்வியே தழுவியதில்லை. இந்த சாதனையை தகர்த்து தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.

Summary

2nd ODI: India batting against Australia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com