

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது. இப்ராஹிம் ஸத்ரான் அதிரடியாக 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 ரன்களும், அஸ்மதுல்லா 27 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிளெஸ்ஸிங் முஸராபானி 2 விக்கெட்டுகளையும், பிராட் ஈவன்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.