சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை!

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
surya kumar yadav
சூர்யகுமார் யாதவ்
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று (அக்டோபர் 29) தொடங்கியது.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது. போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணி 9.4 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடனும், ஷுப்மன் கில் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நீண்ட நேரத்திற்கும் மேலாக மழை நிற்காததால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த முதல் டி20 போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை

இன்றையப் போட்டியில் 39 ரன்கள் எடுத்து களத்திலிருந்த சூர்யகுமார் யாதவ், இரண்டு சிக்ஸர்கள் விளாசியிருந்தார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள் விளாசி அவர் சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 150+ சிக்ஸர்கள் விளாசியவர்கள்

ரோஹித் சர்மா - 205 சிக்ஸர்கள்

முகமது வசீம் - 187 சிக்ஸர்கள்

மார்ட்டின் கப்டில் - 173 சிக்ஸர்கள்

ஜோஸ் பட்லர் - 172 சிக்ஸர்கள்

சூர்யகுமார் யாதவ் - 150* சிக்ஸர்கள்

Summary

Indian team captain Suryakumar Yadav has set a new record in T20 Internationals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com