ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணாவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஷுப்மன் கில் (5 ரன்கள்), சஞ்சு சாம்சன் (2 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (ஒரு ரன்), திலக் வர்மா (0 ரன்), அக்ஷர் படேல் (7 ரன்கள்), ஷிவம் துபே (4 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஹர்ஷித் ராணா 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட், 4 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் எல்லிஸ் மற்றும் சேவியர் பார்ட்லெட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
Summary
India were bowled out for 125 runs in the second T20I against Australia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே-ஆஃப் நம்பிக்கையில் நீடிக்கும் கொல்கத்தா

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
கார்த்திக் சர்மா, துபே அதிரடி... லக்னௌவுக்கு 188 ரன்கள் இலக்கு!

மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி : கடலூா் காவல்துறை அணி முதலிடம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



