

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய மகளிரணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய மகளிரணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், ``இந்திய அணியை முன்னின்று வழிநடத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்கும், விளையாட்டை உயிர்ப்புடன் வைத்திருந்த ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மாவுக்கும் வாழ்த்துகள். இந்திய அணியை மென்மேலும் வெற்றிபெறச் செய்யவும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
யுவராஜ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், ``ஸ்கோர்போர்டுக்கு அப்பாலும் வெற்றிகள் பல உள்ளன. அதில் இதுவும் ஒன்று.
ஹர்மன்ப்ரீத், அழுத்தத்தின்கீழ் இருந்தாலும் பொறுமையுடனும் அமைதியாகவும் விளையாடுவதைக் காண முடிந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸும் மிகுந்த கவனத்துடன் விளையாடினார்.
இந்தக் கூட்டணி, அவர்களின் மீதான நம்பிக்கை மற்றும் அவர்களின் குறிக்கோள் எது என்பதை நிரூபித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க அரையிறுதிப் போட்டியின் வெற்றி, இறுதிப் போட்டியிலும் முன்னேற வேண்டும்’’ என்று வாழ்த்தியுள்ளார்.
வீரேந்திர சேவாக் வாழ்த்துப் பதிவில், ``இன்னொரு அரையிறுதிதான் எளிதாக வென்று விடலாம் என்று ஆஸ்திரேலியா நினைத்தார்கள்.
ஆனால், இதுதான் பதிலடிக்கான சரியான நேரம் என்று அனைத்து விமர்சனங்களையும் எங்கள் பெண்கள் துடைத்தெறிந்தனர். என்ன ஒரு ஆட்டம்!
எங்கள் பெண்கள்! எங்கள் பெருமை!’’ என்று கூறியுள்ளார்.
விராட் கோலியின் எக்ஸ் பக்கத்தில், ``ஆஸ்திரேலியா போன்ற ஒரு வலிமையான எதிரணியை நமது அணி வென்றது - எவ்வளவு பெரிய வெற்றி. பெண்களின் சிறந்த ஆட்டம், ஜெமிமாவின் தனித்துவமான செயல்திறன்.
இந்த ஆட்டமானது, மனவலிமை, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. இந்திய அணிக்கு வாழ்த்துகள்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சேஸிங்கில் வரலாறு.! இறுதிப்போட்டியில் இந்திய அணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.