

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேசம் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேசம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சட்டோகிராமில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹாசனை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய தன்சித் ஹாசன் 62 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சைஃப் ஹாசன் 23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோமாரியோ ஷெப்பர்டு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் மற்றும் கேரி பியர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.