
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் பரிசுத் தொகை கடந்த முறையைவிட நான்கு மடங்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.
இந்த நிலையில், இந்த தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
மொத்த பரிசுத் தொகை 1.38 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பின்படி, ரூ. 122 கோடியாகும். கடந்த 2022 உலகக் கோப்பை தொடரில் 35 லட்சம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
அதேபோல், கடந்த 2023 ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையின் போது பரிசுத் தொகையாக வழங்கப்பட்டதைவிட (ஒரு கோடி அமெரிக்க டாலர்கள்) அதிகமாகும்.
யாருக்கு எவ்வளவு பரிசு?
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ. 39.54 கோடி (கடந்த முறையைவிட 239 சதவிகிதம் அதிகம்).
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 19.77 கோடி.
அரையிறுதியில் வெளியேறும் இரண்டு அணிகளுக்கும் தலா ரூ. 9.88 கோடி.
பிற இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு அதற்கேற்றவாறு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு இணையாக பெண்களும் நடத்தப்படுவார்கள் என்பதை உறுதி செய்யவே நான்கு மடங்கு பரிசுத் தொகையை அதிகரித்துள்ளோம் என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.