
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி மவுண்ட் மாங்கனூவின் பே ஓவலில் துவங்குகிறது.
இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள மிட்செல் ஸ்டார்க் மற்றும் காயம் காரணமாக விலகியுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருவரும் அணியில் சேர்க்கப்படவில்லை.
அதேவேளையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பென் துவார்ஷியஸ், ஜோஸ் ஹேசில்வுட், சீன் அப்பார்ட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லீஸ் - அவருடைய மனைவி கோனி இருவருக்கும் முதல் குழந்தை பிறந்துள்ளதால், அவர் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் தலையில் அடிபட்ட அதிரடி ஆட்டக்காரர் மிட்ச் ஓவன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் மேத்யூ ஷார்ட்ஸ் இருவரும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
அணி விவரம்
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அப்பார்ட், சேவியர் பார்லட், டிம் டேவிட், பென் துவார்ஷியஸ், ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், மேட் குனெமென், கிளென் மேக்ஸ்வெல், மிட்ச் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.