இருமுனை கத்தியாக உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை! - முன்னாள் பயிற்சியாளர் கருத்து

உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இருமுனை கத்தியாக இருக்கும் என முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளதைப் பற்றி...
இந்திய மகளிரணியினர்.
இந்திய மகளிரணியினர்.
Published on
Updated on
1 min read

உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இருமுனை கூர் கொண்ட கத்தியாக இருக்கும் என இந்திய மகளிரணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் தெரிவித்துள்ளார்.

7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி அசாமின் குவாஹாட்டியில் துவங்குகிறது.

இந்த உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில், அனைத்து அணி வீராங்கனைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா சார்பில் இதுவரை 1978, 1997 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது நான்காவது முறையாக இந்தியாவில் உலகக் கோப்பை நடத்தப்படவுள்ளது.

இதில், இந்திய அணி 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து இந்திய மகளிரணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் கூறுகையில், “உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவது என்பது பழக்கப்பட்ட சூழல், எளிமையாக இருக்கும் எனக் கருதலாம். ஆனால், சிறப்பாக விளையாடும் அணிக்கு எதிராக அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

சொந்தமண்ணில் விளையாடுவதால் மெத்தனப் போக்குடன் இருக்கக்கூடாது. உள்ளூர்ப் போட்டிகள் இருமுனை கூர்கொண்ட கத்தியைப் போன்று இருக்கலாம். மற்ற அணிகளும் இப்போது சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடுகின்றன. இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

இந்திய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. ஆனால், 2 முறை இரண்டாம் இடம்பிடித்திருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடியது.

இந்திய அணியில் காலங்காலமாக சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் இது இந்திய அணிக்குத்தான் சவாலாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Summary

Home World Cup can be double-edged sword, can't just relax: Former India women's coach

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com