
சிஎஸ்கேவிலிருந்து விலகிய ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் விளையாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் இருந்து அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்.
இங்கிலாந்தின் தி ஹன்ட்ரெட், துபையின் ஐஎல்டி20 ஆகிய தொடர்களில் அஸ்வின் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அஸ்வினை அழைத்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிரிக்கெட் ஆஸ்திரேலிய சிஇஒ டாட் கிரீன்பெர்க், “அஸ்வின் மாதிரி ஒருவர் பிபிஎல் தொடருக்கு வந்தால் அது எங்களுக்கு மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும். அஸ்வின் ஒரு சாம்பியன் கிரிக்கெட்டர். அவர் வந்தால் பிக் பாஷ் லீக்கிற்கும் எங்களது கோடைக் காலத்திற்கும் மிகுந்த வரவேற்பாக இருக்கும்” என்றார்.
மொத்தமாக அஸ்வின் 333 டி20 போட்டிகளில் 317 விக்கெட்டுகள், 1,233 ரன்கள் குவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.