கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!

பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் பாத்திமா சனா பேசியதாவது...
MSD, Fathima Sana.
எம்.எஸ்.தோனி, பாத்திமா சனா. படங்கள்: சிஎஸ்கே, பாதிமா சனா
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் பாத்திமா சனா உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி போல கூலாக இருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்த மாதத்தில் நடைபெற இருக்கின்றன.

மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கையில் செப்.30 முதல் நவ.2ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் பாத்திமா சனா கூறியதாவது:

உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் முதன்முதலாக கேப்டன்சி செய்யும்போது பதற்றமாகத்தான் இருக்கும். ஆனால், நான் எம்.எஸ்.தோனியிடம் இருந்து உத்வேகத்தை எடுத்துக்கொள்கிறேன்.

இந்தியா, சிஎஸ்கேவுக்கு அவர் கேப்டனாக இருக்கும் போட்டிகளை பார்த்துள்ளேன். அவரது முடிவெடுக்கும் திறன், அமைதி, எப்படி வீரர்களை நம்புகிறார் என பலவற்றைக் கற்றுள்ளேன்.

நான் கேப்டனாகும்போது தோனியைப் போலவே ஆக விரும்புகிறேன். அவரது நேர்காணல்கள் பலவற்றையும் பார்த்து கற்றுக்கொள்கிறேன் என்றார்.

Summary

Pakistan women's cricket team captain Fatima Sana draws inspiration from India's World Cup-winning skipper MS Dhoni and aspires to become 'Captain Cool' like him, as she prepares to lead her side to the 50-over World Cup later this month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com