
ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 7 அணிகள் தங்களது வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ள நிலையில், கடைசி அணியாக போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் அணியின் 17 பேர் கொண்ட வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, 2016 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகம் அணி பங்கேற்றிருந்தது. அதன்பின்னர், இப்போது மீண்டும் போட்டியை நடத்தும் அணியாக பங்கேற்றுள்ளது.
அணி விவரம்
முகமது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரஃபு, ஆர்யன்ஷ் சர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முகமது ஃபரூக், முகமது ஜவ்வதுல்லா, முகமது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் சிங், சிம்ரன்ஜீத் சிங், சகீர் கான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.