பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

புதிய ஜிஎஸ்டி வரிவிகிதத்தின் எதிரொலியால் ஐபிஎல் டிக்கெட்டின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்..!(படம் - CSK X)
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரிவிகிதத்தின் எதிரொலியால் ஐபிஎல் டிக்கெட்டின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நேற்று(செப். 3) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இந்த வரிவிகித அறிவிப்புகள் வருகிற 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் நிலையில், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு வரி விதிப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

குளியல் பொருள்கள், நெய் மற்றும் பால் பொருள்கள், குழந்தைகளுக்கான உணவு பாட்டில்கள், டயப்பர்கள் மற்றும் நாப்கின்கள் போன்றவைக்கு வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதேவேளையில் ரேசிங், கிளப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டணங்கள் 28 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இந்தியாவில் கோடைக்கால விடுமுறைகளை மையமாக வைத்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டி உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் லீக் போட்டியாகவுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளுக்கு தனி மவுசு இருந்தாலும், சென்னை, பெங்களூரு, மும்பை அணிகளின் போட்டிகளைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆன்லைன் காத்திருந்து டிக்கெட் கிடைக்காத விரக்தியில் கள்ளச்சந்தைகளிலும் டிக்கெட்டுகளை வாங்குகின்றன.

நேரில் டிக்கெட் விற்பனை என்று கூறினாலும், அங்கும் ஐபிஎல் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. இவ்வாறான நிலையில், தற்போது ஐபிஎல் டிக்கெட்டுக்கான வரிவிகிதம் மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

புதிய வரிவிகிதத்தின் அடிப்படையில் ஐபிஎல் டிக்கெட்டின் விலை ரூ.500 டிக்கெட் ரூ.640 லிருந்து ரூ. 700 ஆகவும், ரூ.1,000 டிக்கெட் ரூ.1,280 லிருந்து ரூ.1,400 ஆகவும், ரூ.2,000 டிக்கெட் ரூ.2,560 லிருந்து ரூ. 2,800 ஆகவும் உயர்ந்துள்ளது.

இருப்பினும், ஐபிஎல்லை போன்றே இந்திய சூப்பர் லீக், புரோ கபடி லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இந்த வரிவிகிதத்தில் வருமா? என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

Summary

Watching IPL Live Just Got Costlier! New GST Hike Pushes Stadium Tickets into Luxury Bracket

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com