

மகளிர் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் இறுதியில் நடைபெற இருக்கும் ஒருநாள் மகளிர் உலகக் கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் வரும் செப்.30 முதல் நவ. 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
அலீஸா ஹீலி தலைமையிலான இதற்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்ட சோபியா மோலினெக்ஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
7 முறை உலகக் கோப்பை வென்றுள்ள ஆஸி. அணி மீண்டும் கோப்பை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.
ஆஸி. தனது முதல் போட்டியில் இந்தூரில் அக்.1ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலிய மகளிரணி: அலீஸா ஹீலி, டார்சி ப்ரௌன், கிம் கிராத், கிரேஸ் ஹாரிஸ், அலானா கிங், ஃபோபியே லிட்சிஃபைட், டஹிலா மெக்ராத், சோபியா மோலினெக்ஸ், பெத் மூனி, எல்லீஸ் பெர்ரி, மேகன் ஷுட், அன்னபெல் சதர்லேண்ட், ஜியார்ஜியா வோல், ஜியார்ஜியா வேரெஹம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.