டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
- படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :6 செப்டம்பர் 2025, 1:20 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம்பர் 6) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட் செய்தது.

முதலில் விளையாடிய இலங்கை அணி ஜிம்பாப்வேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை அணியில் கமில் மிஷாரா அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சரித் அசலங்கா 18 ரன்களும், ஷானகா 15 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஜிம்பாப்வே தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் சிக்கந்தர் ராஸா மற்றும் பிராட் ஈவன்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். பிளெஸ்ஸிங் முஸராபானி 2 விக்கெட்டுகளையும், சீன் வில்லியம்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.

summary

Sri Lanka were bowled out for 80 runs in the second T20I against Zimbabwe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.