
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 16 முதல் 19 வரையும், இரண்டாவது போட்டி செப்டம்பர் 23 முதல் 26 வரையும் லக்னௌவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இந்த அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான துரூவ் ஜுரெல் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணி விவரம்
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என்.ஜெகதீசன், சாய் சுதர்சன், துரூவ் ஜுரெல் (துணைக் கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதீஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், கலீல் அகமது, மானவ் சுதர், யஷ் தாக்குர்.
இந்தியா ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.