
டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பாக ஆசியக் கோப்பையை வெல்வோம் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அபு தாபியில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங்கை வீழ்த்தியது. இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதவுள்ளன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பாக ஆசியக் கோப்பையை வெல்வோம் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: இந்திய அணிக்காக விளையாடி நீண்ட நாள்கள் ஆகிறது. ஆனால், நான் மீண்டும் வந்துவிட்டேன். உலகை வெல்வதற்கு முன்பாக முதலில் ஆசியாவை வெல்லலாம் என்றார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018, 2023 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. 9-வது முறையாக ஆசியக் கோப்பையை வெல்லும் கனவோடு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், ஜித்தேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
ரிசர்வ் வீரர்கள்
பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐசிசி டி20 தரவரிசை வெளியீடு; இந்திய வீரர்கள் முன்னேற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.