ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அடுத்த 6 வாரங்களுக்கு முற்றிலுமாக ஓய்வெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. காயம் காரணமாக இந்த தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார். அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்த 6 வாரங்களுக்கு முற்றிலும் ஓய்வில் இருக்க உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அடுத்த ஒரு மாதத்துக்கு என்னால் பந்துவீச்சில் ஈடுபட முடியாது. குறைந்தது 6 வாரங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஆனால், அது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என முடிவு செய்துள்ளேன். ஆஷஸ் தொடருக்கு முன்பாக எங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. அடுத்த சில வாரங்களுக்கு முற்றிலும் பந்துவீச்சில் ஈடுபடப் போவதில்லை. ஆஸ்திரேலிய அணி நன்றாக உள்ளது. ஆஷஸ் தொடருக்காக நிறைய திட்டங்கள் எங்களிடம் உள்ளன என்றார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.