
அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் தென்னாப்பிரிக்க அணி புதிய பிரச்னையை சந்திக்க உள்ளது.
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 ஆம் ஆண்டுக்கான சுழற்சிக்கான போட்டிகளில் அடுத்த மாதம் முதல் விளையாடவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தென்னாப்பிரிக்க அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதிலிருந்து அந்த அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான போட்டிகள் தொடங்குகின்றன.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியில் தொடர்ச்சியாக வீரர்கள் காயமடைவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த வீரர்களான லுங்கி இங்கிடி மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து லுங்கி இங்கிடி விலகுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடிக்குப் பதிலாக நண்ட்ரே பர்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தென்னாப்பிரிக்க வீரர்கள் குணமடைந்து அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்த ஷிவம் துபே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.