காஞ்சனா 4 படத்தினால் வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றிய ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்த நற்செய்தி குறித்து...
Raghava Lawrence turned his house into a school with the film Kanchana 4.
காஞ்சனா 4 படத்தினால் வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றிய ராகவா லாரன்ஸ்.படங்கள்: எக்ஸ் / ராகவா லாரன்ஸ்.
Published on
Updated on
1 min read

நடிகர் ராகவா லாரன்ஸ் குழந்தைகளுக்காக தனது முதல் வீட்டை இலவச பள்ளிக்கூடமாக மாற்றியுள்ளார்.

காஞ்சனா 4 படத்தின் மூலம் கிடைத்த முன்பணத்தை வைத்து இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக இருந்து நடிகராகி தற்போது படங்களை இயக்கியும் வருகிறார். அவரது இயக்கத்தில் கடந்த 2011இல் வெளியான காஞ்சனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து மூன்று பாகங்கள் எடுக்கப்பட்டன. சமீபத்தில், ராகவேந்திரா புரடக்‌ஷன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா - 4 உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நோரா ஃபதேகி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இதில், பேய் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் காஞ்சனா 4 படப்பிடிப்பு தொடங்கியதாகக் கூறியுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

இலவச பள்ளிக்கூடம்

காஞ்சனா 4 படப்பிடிப்பு பாதியில் இருக்கிறது. அதில் கிடைத்த முன்பணத்தினை வைத்து, எனது முதல் வீட்டை குழந்தைகள் படிக்கும் இலவச பள்ளிக் கூடமாக மாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இங்கு வளர்ந்த ஒரு பெண்ணே முதல் ஆசிரியையாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

எனது படங்களில் முன்பணம் கிடைக்கும்போதெல்லாம் எதாவது நல்லது செய்வது வழக்கம். தற்போது, எனது முதல் வீட்டை இலவச பள்ளிக்கூடமாக மாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி.

சேவையே கடவுள்

ஜுனியர் நடனக்குழுவில் இருக்கும்போதே சேர்த்து வைத்து கட்டிய முதல்வீடு இது. பிறகு இந்த வீட்டை ஆதரவற்றவர்கள் குழந்தைகள் தங்கிப் படிக்க உதவியாக இருந்தது. பிறகு, வாடகை விடப்பட்டிருந்தது.

தற்போது எனது பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து வேலைக்குச் செல்கிறார்கள். மீண்டும் இந்த வீட்டை மற்றுமொரு நல்ல செயலுக்கு பயன்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி.

இங்கு வளர்ந்த ஒருவரே இந்தப் பள்ளிக்கு முதல் ஆசிரியையாக வந்து அவர் பெற்றதைத் திருப்பி அளிக்கிறார். இந்தப் புதிய தொடக்கத்துக்கு உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறேன். எப்போதும் போல் எனக்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். சேவையே கடவுள் என்றார்.

Summary

Actor Raghava Lawrence has converted his first home into a free school for his children.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com