புதிய சாதனையை நோக்கி நகரும் லிட்டன் தாஸ்!

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.
litton das
லிட்டன் தாஸ்படம் | AP
Updated on
1 min read

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஹாங் காங் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங் காங்கை வீழ்த்தியது. சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த கேப்டன் லிட்டன் தாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்றையப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், வங்கதேச அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை லிட்டன் தாஸ் படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் 2444 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திலிருந்த மஹ்மதுல்லாவை பின்னுக்குத் தள்ளி, லிட்டன் தாஸ் இரண்டாமிடம் பிடித்தார்.

வங்கதேச அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2551 ரன்களுடன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் இருக்கிறார். 2496 ரன்களுடன் லிட்டன் தாஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

வங்கதேச அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக மாறி சாதனை படைக்க லிட்டன் தாஸுக்கு இன்னும் 56 ரன்கள் மட்டுமே தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Bangladesh captain Liton Das is on the verge of breaking a new record in T20 internationals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com