
இந்தியாவை வெல்வது மட்டும் தங்களது இலக்கு அல்ல எனவும், ஆசிய கோப்பையை வெல்வதுதான் தங்களது முக்கிய இலக்கு எனவும் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை (செப்டம்பர் 14) துபையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்தியாவை வெல்வது மட்டும் தங்களது இலக்கு அல்ல எனவும், ஆசிய கோப்பையை வெல்வதுதான் தங்களது முக்கிய இலக்கு எனவும் பாகிஸ்தான் வீரர் சைம் ஆயுப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு நாங்கள் விளையாடவில்லை. ஆசிய கோப்பையை வெல்வதே எங்களது பிரதான இலக்கு. எதிரணி யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக அச்சமின்றி விளையாட முயற்சி செய்வோம்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சவால் இருக்கிறது. நாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்துவீச்சாளருமே எங்களுக்கு சவாலளிக்கக் கூடியவர்கள்தான். அணிக்கு வெற்றி பெற்று தருவதற்கான வழியை கண்டுபிடிப்பதே எங்களுக்கு இருக்கும் மிக முக்கியமான வேலை என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 15 போட்டிகளில் 12 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.