சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாகவுள்ளதாக பிரிடோரியா கேபிடல்ஸ் வீரர் பிரேவிஸ் தெரிவித்துள்ளதைப் பற்றி...
பிரிடோரியா கேபிடல்ஸ் அணி வீரர் டெவால்டு பிரேவிஸ்.
பிரிடோரியா கேபிடல்ஸ் அணி வீரர் டெவால்டு பிரேவிஸ்.
Published on
Updated on
1 min read

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளதாக பிரிடோரியா கேபிடல்ஸ் அணி வீரர் டெவால்டு பிரேவிஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 நான்காவது தொடருக்கான ஏலம் சில நாள்களுக்கு முன்னதாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் வெறும் 22 வயதே ஆன டெவால்டு பிரேவிஸ் 16.5 மில்லியனுக்கு (இந்திய மதிப்பில் ரூ.8.3 கோடிக்கு மேல்) ஏலத்தில் எடுக்கப்பட்டு, எஸ்ஏ20 வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்ற சிறப்பான சாதனையையும் படைத்தார்.

இந்த நிலையில், எம்ஐ கேப்டவுன் அணியில் இருந்து விலகி, சொந்த மண்ணில் செஞ்சூரியனில் (அதாவது பிரிடோரியா) விளையாடுவது குறித்து பேசினார் டெவால்டு பிரேவிஸ்.

இதுகுறித்து டெவால்டு பிரேவிஸ் பேசுகையில், “

நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். நீங்கள் எப்போதும் கடந்து வந்ததை திரும்பி பார்க்க வேண்டும். எம்ஐ அணியில் மூன்று ஆண்டுகள் விளையாடியது சிறப்பாக இருந்தது.

கடந்தாண்டு பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதனை நாங்கள் சரி செய்து சிறப்பாக விளையாடினோம். அதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். ஆனால், இப்போது புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது.

நான் என்னுடைய சொந்த மண்ணில் விளையாடவுள்ளேன். சூப்பர் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் திடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

அங்குதான் நானும் என்னுடைய அண்ணனும் சிறுவயதில் விளையாடியுள்ளோம். இப்போது மீண்டும் அங்கு விளையாடவிருப்பதால் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

அணித் தேர்வு குறித்து பேசுகையில்,

அணித் தேர்வு நன்றாக இருக்கிறது. லுங்கி இங்கிடி இருக்கிறார். வங்கதேசத்தில் தொடங்கிய நட்பு குறித்த நினைவுகள் இருக்கின்றன. லிசாட் வில்லியம்ஸ் இருக்கிறார் மற்றும் உள்ளூர் நண்பர்கள் பலரும் அணியில் இருக்கின்றனர்”.

ரஸ்ஸல், ரூதர்போர்டு உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்கள் இருப்பதாலும், சூப்பர் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் திடல் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகவும் இருக்கும்” என்றார்.

Summary

TO BE WITH PRETORIA CAPITALS, I’M SUPER EXCITED. IT IS MY HOMETOWN” – DEWALD BREVIS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com